கடும் வறட்சியில் இங்கிலாந்து...வெப்பம் தாங்காமல் உடலில் மணலை பூசிகொள்ளும் மக்கள்!

கடும் வறட்சியில் இங்கிலாந்து...வெப்பம் தாங்காமல் உடலில் மணலை பூசிகொள்ளும் மக்கள்!
Published on
Updated on
1 min read

இங்கிலாந்தில் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வெப்ப அலை:

பருவநிலை மாற்றம் காரணமாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் வாட்டி வருகிறது. 1935ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்தில் மிகவும் வறட்சியான சூழல் கடந்த ஜூலை மாதம் நிலவியுள்ளது. கடந்த மாதத்தில் மழைப்பொழிவானது 35சதவீதம் மட்டுமே இருந்ததாகவும், ஆனால், வெப்ப அலை அளவுக்கு அதிகமாக வீசி வருவதால் பல்வேறு பகுதிகள் வறண்டு வருவதாகவும்  இங்கிலாந்து வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. 

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்:

வறட்சியை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ள அரசு, குடியிருப்பு வாசிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது. 

மண்ணை உடலில் பூசி கொள்ளும் மக்கள்:

மேலும், சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள், ஆற்று மண்ணை உடலில் பூசி வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

வெப்ப அலை அளவுக்கு அதிகமாக வீசி வருவதால் இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதி  இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டு போயுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நீடிக்கும் வறண்ட வானிலை மற்றும் அதிக வெப்பம் காரணமாக, அப்பகுதிகள் வறட்சிக்கு  தள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com