கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலோன் மஸ்க் உறவு:

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலோன் மஸ்க் உறவு:

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடன் உறவு வைத்திருப்பதை மறுத்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து உறவில் இருப்பதாக  ஊடகங்கள் கூறுகின்றன.

”நானும் செர்ஜி பிரின்னும் நண்பர்கள். நேற்று இரவு ஒரு விருந்தில் ஒன்றாக இருந்தோம். நான் நிக்கோலை மூன்று வருடங்களில் இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அந்த இரண்டு முறையும் எங்களை சுற்றி பலர் இருந்தனர்.  எங்களுக்குள் காதல் ஒன்றும் இல்லை” என்று மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் அறிக்கையின்படி , மஸ்க் மற்றும் நிக்கோல் மியாமியில் காதல் உறவு வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பிரின் ஜனவரி மாதம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.  இந்த உறவு காரணமாக மஸ்க் மற்றும் பிரின் இடையேயான நட்பை முடிவுக்கு வந்தது என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை வெளீயிட்டுள்ளது.

மஸ்க் மற்றும் நிக்கோல் உறவினால் கூகுள் இணை நிறுவனர் மற்றும் அவரது மனைவி பிரிந்தனர். ஆனால் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.