மீண்டும் எபோலா வைரஸ்....தொடரும் பலி எண்ணிக்கை.....

மீண்டும் எபோலா வைரஸ்....தொடரும் பலி எண்ணிக்கை.....

உகாண்டாவில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பிற்கு 55 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான, காங்கோ, மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் கடந்த 2020 ம் ஆண்டில் எபோல வைரஸ் பரவியது.  இதனால் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் கடந்தாண்டு செப்டம்பரில் பலருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு உறுதியானது.  

பின்னர்  தடுப்பூசி போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்நிலையில் இன்று தலைநகர் கம்பாலாவில் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  அதில் 113 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இதில் 55 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதாக கூறப்படுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தென்கொரியாவைத் தொடர்ந்து....தடை விதித்த சீனா!!! எதற்காக இந்த தடை?