நேபாள நாட்டில் நிலநடுக்கம்...! ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு..!

நேபாளத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும் எந்த பொருட் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 147 கி.மீ தொலைவில் உள்ள திக்தெல் பகுதியில் இருந்து, 3 கி. மீ தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின்படி, ரிக்டர் அளவில், 5.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கமானது நேற்று காலை 7.58 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலநடுக்கத்த்தின் தாக்கம், காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீகாரில் பல இடங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக நிலா அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அளிக்கப்பட்ட தகவலின் படி, பீகாரின் கதிஹார், முங்கர், மாதேபுரா மற்றும் பெகுசராய் ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால், நல்வாய்ப்பாக பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.