பிரேசிலில் டைனோசரின் மாறுபட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு..!

மாறுபட்ட எச்சத்தால் பிரமிப்படைந்த ஆராய்ச்சியாளர்கள்..!

பிரேசிலில் டைனோசரின் மாறுபட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு..!

டைனோசர் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான, பிரமிப்பூட்டும் விலங்கு. இப்போது இந்த விலங்கு இனமே இல்லை என்றாலும் கூட, நாம் கண்ணால் பார்த்திருக்கவில்லை என்றால் கூட இந்த விலங்கு பற்றின புதுபுது விஷயங்களை தெரிந்து கொள்வதில் நமக்கான ஆர்வம் அலப்பறியது. அந்த வகையில், பிரேசில் நாட்டில் மரண்ஹோ எனும் பகுதி அருகே ரயில்வே சுரங்கபாதைக்காக நடைபெற்ற பணியின் போது டைனோசரின் எச்சங்கள் கிடைத்துள்ளது. டைனோசர் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பழங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு இது மற்றொரு கதவை திறந்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழங்கால ஆராய்ச்சியாளர்கள், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எச்சங்கள் விட இது மாறுபட்டதாக உள்ளது என குறிப்பிட்டனர்.