டிஜிட்டல் கல்யாணம்! கூகுள் மீட்டில் வருகை தரும் உறவினருக்கு zomato மூலம் டெலிவரி செய்யப்படும் விருந்து!!

கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்டு ஆன்லைன் மூலம் விருந்து வைத்த தம்பதிகள்.

டிஜிட்டல் கல்யாணம்! கூகுள் மீட்டில் வருகை தரும் உறவினருக்கு zomato மூலம் டெலிவரி செய்யப்படும் விருந்து!!

கொரோனா தொற்று நாட்டில் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் அனைவரது சராசரி வாழ்க்கையில் மாஸ்க் சேனிடைஜர் சமூக இடைவெளி எல்லாம் மனிதன் உயிர் வாழ்வதற்கான வழிகளில் ஒன்றாக மாறிவிட்டது.இப்படிப்பட்ட கொரோனா காலக்கட்டத்தில் இளம் தம்பதியினரான மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவரும் தங்களது திருமணத்தினை டிஜிட்டலாக நடத்துவதற்கு திட்டமிட்டனர்.அதனால் அவர்களது மண விழாவில் விருந்தினர்களை கூகுள் மீட் மூலமாக இணைத்தும், சொமேட்டோ மூலமாக கல்யாண விருந்து வைத்து அசத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். 

“வரும் 24-ஆம் தேதி நானும், அதிதி தாஸூம் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். தற்போது கொரோனா தொற்று பரவி வருகின்ற காரணத்தால் திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டுமென மாநில அரசு விதிமுறைகள் தெரிவிக்கின்றன. அதனால் எங்கள் திருமண விழாவில் விருந்தினர்களை கூகுள் மீட் மூலமாக இணைக்க முடிவு செய்தோம். ஏனெனில் நானும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எங்கள் திருமண விழாவில் பங்கேற்கும் எங்களது குடும்பம் மற்றும் விருந்தினர்களுக்கு தொற்று பரவக் கூடாது என முடிவு செய்தேன். அதன்படி திருமண வைபவத்தை இணையத்தின் மூலம் லைவ் டெலிகாஸ்ட் செய்ய முடிவு செய்தேன். இதற்கு எனது இணையரும் சம்மதம் சொன்னார். இப்போது கூகுள் மீட் வழியாக விருந்தினர்கள் அனைவரும் அவரவர் இருக்கும் இடத்தில் பத்திரமாக இருந்தபடி எங்கள் திருமண விழாவில் பங்கேற்க உள்ளார்கள். அவர்களுக்கு எங்கள் கல்யாண விருந்தை சொமேட்டோ மூலம் டெலிவரி செய்ய உள்ளோம்” என மணமகன் சந்தீபன் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இவர்களது திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் நேரில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சொமேட்டோ நிறுவனம் இந்த திருமண டெலிவரி ஆர்டரை கண்காணிக்க குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்களின் டிஜிட்டல் கல்யாணம் வைரலாகி வருகிறது.