எதேச்சதிகார எண்ணத்தால் கனடாவின் உறவை இழந்ததா சீனா...!!!

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது பல உலகத் தலைவர்களுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

எதேச்சதிகார எண்ணத்தால் கனடாவின் உறவை இழந்ததா சீனா...!!!

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது பல உலகத் தலைவர்களுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் தவறவிட்டார்.  இதற்கு காரணம் அவரது எதேச்சதிகார எண்ணம் என்று கூறப்படுகிறது. 

ஜி-20 உச்சி மாநாட்டிலும் அதிகாரத்தை காட்ட வேண்டும் என்று ஜின்பிங் திட்டமிட்டிருந்தார்.  ஆனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது எண்ணங்கள் பொய்த்துப் போனது.  

ட்ரூடோ மற்றும் ஜின்பிங் விவாதம்:

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   நவம்பர் 15 அன்று இரு உலகத் தலைவர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு இருந்தது. இந்த சந்திப்பின் போது, ​​ஊடகங்களில் வரும் இருவருக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் குறித்து ஜின்பிங் கடுமையாக நடந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​​​ ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்கொண்ட உடனேயே, சீன அதிபர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.  மேலும் அனைத்து தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறினார்.

இருவருக்குமிடையிலான உரையாடல் தொடர்பான விவரங்களை கனடா பிரதமர் அலுவலகம் ஊடகங்களுக்கு அளித்தன என ஜின்பிங் குற்றஞ்சாட்டினார்.  இது சரியல்ல எனவும் பேச்சுவார்த்தை நடந்த விதமும் சரியில்லை என்று ஜின்பிங் மேலும் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய ஜின்பிங் நேர்மையாக இருந்தால் மரியாதையாக பேச வேண்டும் என்றும் கூறினார்.  அதனைத் தொடர்ந்து ​​கனடா பிரதமருக்கு ஜின்பிங் பின்விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

கனடா பிரதமர் விளக்கம்:

ஜின்பிங்கின் குற்றச்சாட்டுகள் குறித்து கனடா பிரதமர் ட்ரூடோ கடுமையாகப் பேசினார்.  கனடா திறந்த மற்றும் சுதந்திரமான உரையாடலை நம்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.  கனடாவில், நாங்கள் சுதந்திரமான, திறந்த மற்றும் நியாயமான உரையாடலை நம்புகிறோம் எனவும் அதைத் தொடர்ந்து செய்வோம் எனவும் கூறினார் கண்டா பிரதமர்.  மேலும் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மத்திய ஆசிய நாடுகளில் அதிகார பரவலாக்கம் சாத்தியமாகுமா?!!