5,000 போன்களுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய - பவர் பேங்க் உருவாக்கி அசத்திய நபர்!!

தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி யூடியூபர் ஒருவர் ஒரே நேரத்தில் 5,000 போன்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்ட  பவர் பேங்கை உருவாக்கியுள்ளார்.

5,000 போன்களுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய - பவர் பேங்க்  உருவாக்கி அசத்திய நபர்!!

தற்போது  கூடுதல் பேட்டரிக்காக பவர் பேங்கை அனைவரும் பயன்படுத்தி வருகின்றோம், மின்சாரம் இல்லாத நேரத்தில் பவர் பேங்க்கை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.பவர் பேங்க்கள் தற்போது சில ஆயிரம் மில்லியம்பியர் மணிநேரங்களுக்கு மட்டும் செயல்படும் திறன்களை கொண்டதாக வடிவமைத்து வருகின்றனர். இந்நிலையில் ஹேண்டி கெங் என அழைக்கப்படும் வெல்டிங் கலைஞர் ஒருவர் தனது நண்பர்கள் அனைவரிடமும் தன்னை விட அளவில் பெரிய பவர் பேங்க்கள் வைத்துள்ளதை கண்ட அவருக்கு இந்த  போர்ட்டபிள் பவர் பேங்கை உருவாக்கும் யோசனை வந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

இந்த நபர் தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி உலோக சட்டத்தை உருவாக்கி அதனுடன் துருப்பிடிக்காத எஃகு தாளை வெளிப்புறத்தில் பயன்படுத்தி உள்ளே மின்சார காரினை இயக்கும் அளவிற்கு திறன் கொண்ட பேட்டரிகளை கொண்டு பவர் பேங்க்கை உருவாக்கியுள்ளார். இந்த பவர் பேங்கில் மின்சார சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக 60 பவர் ஜாக்கெட்டுகளை வைத்துள்ளது.  மேலும் பவர் பேங்கை பயன்படுத்தி டிவி, மின்சார குக்கர், துணி துவைக்கும் இயந்திரம் போன்றவற்றை இயக்கும் திறனையும் கொண்டுள்ளது. இதனை வேறு இடங்களுக்கு எடுத்து செல்லவும் சக்கரங்களோடு கயிறு  ஒன்று இணைக்கபட்டுள்ளது.