நிலைகுலைந்த புளோரிடா.. பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு.. நாளை அதிபர் ஆய்வு..!

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்று இயான் புயல்..!

நிலைகுலைந்த புளோரிடா.. பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு.. நாளை அதிபர் ஆய்வு..!

இயான் புயல்:

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக் கருதப்படுகிற இயான் புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. மணிக்கு 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. புளோரிடாவை சூறையாடி சென்ற இப்புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் கரையை கடந்தது.

நிலைகுலைந்த புளோரிடா:

தீவிர வலுவுடன் தாக்கிய புயலால் ஏராளமான பகுதிகள் தற்போதுவரை தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும், புளோரிடாவே நிலைகுலைந்து காட்சியளிக்கிறது.

அதிபர் நாளை ஆய்வு:

புயல் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை பார்வையிடவுள்ளார்.