கியூபாவின் அசத்தல் கண்டுபிடிப்பு: 92% பயன் தரும் அப்டலா தடுப்பூசி

கியூபாவின் அப்டலா தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 92 சதவீதம் பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கியூபாவின் அசத்தல் கண்டுபிடிப்பு: 92% பயன் தரும் அப்டலா தடுப்பூசி

கியூபாவின் அப்டலா தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 92 சதவீதம் பயனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கியூபாவில், கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே அங்கு சோபர்னா 2 என்ற தடுப்பூசி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவை 62 சதவீதம் மட்டுமே வைரஸுக்கு எதிராக செயலாற்றுவதாக கூறப்பட்ட நிலையில், கியூபா மருத்துவர்கள் புதிதாக 3 டோஸ்கள் கொண்ட அப்டலா என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.  இது வைரஸுக்கு எதிராக 92 சதவீதம் செயலாற்றுவதால், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக  கியூபா தெரிவித்துள்ளது.

கியூபாவின் தடுப்பூசிகளை பெற அர்ஜென்டினா, ஜாமாய்க்கா, மெக்சிக்கோ, வியாட்நாம், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.