இம்ரான் கானை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்....!!!

இம்ரான் கானை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்....!!!

இந்த வழக்கின் விசாரணையில் பிடிஐ தலைவர் ஆஜராகவில்லை என்று இசிபி வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தோஷகானா வழக்கில்  சிக்கியுள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்  கட்சியின் தலைவர் இம்ரான் கான், தனது சிக்கல்களை சரிசெய்ய முயற்சி செய்து வரும் வேளையில், தேர்தல் ஆணையம் அவருக்கும் அவரது கட்சித் தலைவர் ஃபவாத் சவுத்ரிக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையிலான கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது.  

ஷா முகமது ஜடோய், பாபர் ஹசன் பர்வானா மற்றும் நீதிபதி (ஓய்வு) இக்ரம் உல்லா கான் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   கட்சியின் தலைவர் வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை என  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக வழக்கின் குற்றவாளிக்கு எதிராக ரூ.50,000 மற்றும் ஜாமீனில் வெளியில் வரும் வகையிலான கைது வாரண்ட் பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளனர்.

நடந்தது என்ன?:

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பிடிஐ தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  

பாகிஸ்தானின் உயர்மட்ட தேர்தல் ஆணையமும் அவரை நேரில் ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை.  இதனால் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  முதலமைச்சரானார் மாணிக் சாஹா...!!!