கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை - உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை - உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கொரோனாத் தொற்று நிலையற்ற ஒன்றாக இருப்பதால் அது முடிவுக்கு வந்து விட்டதாக கருதக் கூடாது என்றார்.

மரபணு மாறிய தொற்று வகைகளில் வேகமாக பரவுவதாகவும் குறிப்பிட்டார். ஒமிக்ரான் மாறுபாடு உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். இறப்புகள் முந்தைய அளவிற்கு இல்லை என்றாலும் தடுப்பூசி குறைவாக உள்ள இடங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் உறுதி செய்வதில் அனைவரும் கூட்டாக பணியாற்ற வேண்டும் என்றும் அதானோம் வலியுறுத்தினார்.