ஐரோப்பாவில் பெருகும் கொரோனா... உலக சுகாதார அமைப்பு கவலை...

ஐரோப்பாவில் கொரோனா பெருகி வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் பெருகும் கொரோனா... உலக சுகாதார அமைப்பு கவலை...

ஐரோப்பாவில் பெருகி வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதி, இயற்கையாகவே தாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, மருத்துவமனைகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், எந்த நாடும் மெத்தனமாக இருக்க முடியாது என்றும், இதன்விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது குளிர்காலத்தின் தொடக்கம்தான் என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.