வழுக்கைத் தலையாக வைக்கப்பட்ட ராணி எலிசெபத்தின் மெழுகு சிலையால் சர்ச்சை...

இங்கிலாந்து அரசின் ராணியாக திகழும் இராண்டாம் எலிசெபத்தின் மெழுகு சிலை வழுக்கைத் தலையாக வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வழுக்கைத் தலையாக வைக்கப்பட்ட ராணி எலிசெபத்தின் மெழுகு சிலையால் சர்ச்சை...

95  வயது நிரம்பிய இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தின் மெழுகு சிலை ஜெர்மனியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் மகாராணி அணிந்திருந்த தொப்பியின் கீழே இருந்த ராணியின் தலை வழுக்கைத் தலையாக இருக்கும் படி அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை பெரும் சர்சையை கிளப்பியுள்ள நிலையில் இது தொடர்பாக அந்த அருங்காட்சியகத்திடம் விளக்கம் கேட்டபோது,பணத்தை சேமிப்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளோம். பார்வையாளர்களுக்கு தெரியும் படியான முடியை நாங்கள் நிறுவியிருக்கிறோம்.இது ஒரு மெழுகு சிலை, உண்மையான நபர் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என அருங்காட்சியகத்தின் நிர்வாக பங்குதாரர் சுசேன் ஃபேர்பர் தெரிவித்துள்ளார்.


மேலும் ஜெர்மனியில் இருக்கும் அவரது மாட்சிமை என்பது பிரிட்டனில் அரச குடும்பத்தில் கையாளப்படும்  மாட்சிமையை விட வித்தியாசமானது. அங்கு பத்திரிகையாளர்கள் அதிக உணர்வுடன் கையாள வேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்  ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் போன்ற பிரபலங்களின் சிலைகள் உள்ளது குறிப்பிடதக்கது.