தென் ஆப்பிரிக்க மந்திரி...மாணவிகளிடையே பாலியல் குறித்து சர்ச்சை பேச்சு..

புத்தகத்தை விரியுங்கள்,கால்களை மூடுங்கள் என மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க மந்திரி...மாணவிகளிடையே பாலியல் குறித்து சர்ச்சை பேச்சு..

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தின் பெண் சுகாதார மந்திரியான போபி ரமதுபா என்பவர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பெண் குழந்தைகளான உங்களுக்கு நான் கூறுவது ஒன்று தான் என பேச ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து பேசிய அவர் மாணவிகளை பார்த்து உங்கள் புத்தகத்தை விரியுங்கள்,உங்கள் கால்களை மூடுங்கள் என்றவாறு கூறியுள்ளார்.மேலும் உங்கள் கால்களை விரிக்காதீர்கள் உங்கள் புத்தகத்தை மட்டுமே விரியுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் இதனை பற்றி பேச தொடங்கிய அவர் பெண்கள் விலை உயர்ந்த விக்குகள் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற பொருட்களால் ஆண்களின் வயதை அறியாமல் ஆசைக்காட்டி கவரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது கருத்துக்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர்.போபி ரமதுபாவின் கருத்து பிரச்சினைக்குரியது என எதிர்கட்சியைச் சேர்ந்த சிவிவே குவாருபே கூறினார்.

"பள்ளி மானவர்களிடம் பாலுறவுக்கு முன் அனுமதி பெறுவது குறித்து அர்த்தமுள்ள ஒரு விவாதத்தை மேற்கொண்டிருக்கலாம்... அதற்கு பதிலாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறுகிறீர்கள். பெண்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கிறீர்கள்." என டுவிட்டர் சமூக தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், தான் ஆண்களையும் குறிப்பிட்டுத் தான் அக்கருத்தைக் கூறியதாகவும் போபி ரமதுபா தற்போது விளக்கம் அளித்து உள்ளார். 

"பெண்களோடு பாலுறவு கொள்ள வேண்டாம், கல்வியில் கவனம் செலுத்துங்கள் என ஆண்களுக்கும்தான் கூறினேன்" என்றார் ரமதுபா. மேலும் தன் தொகுதியான லிம்போபோவின் வாக்காளர்கள் இக்கருத்தை பாராட்டியதாகவும் கூறினார்.கடந்த 2020ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 33,400 பெண்கள் 17 வயதுக்குள் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அரசு  புள்ளிவிவரம் கூறுகிறது.