சீனாவில் தொடர் மழை, வெள்ளத்தில் சிக்கி....15 பேர் பலி

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் தொடர் மழை, வெள்ளத்தில் சிக்கி....15 பேர் பலி
சீனாவின் வடக்கே உள்ள ஷாங்சி மாகாணத்தில் கடந்த 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளபெருக்கால் மாகாணத்தின் பல பகுதிகள் பாதிப்பிற்க்குள்ளாகின. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து 120,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்
விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழை நீரில் முழ்கி முற்றிலும் சேதமாகின. இதன் காரணமாக அங்கு 78 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும்,3 பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.