அதிகார போட்டியால் சிறையில் மோதல்... 68 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்...

ஈக்வடார் நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

அதிகார போட்டியால் சிறையில் மோதல்... 68 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்...

தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் க்யாகுல் நகரில்  மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் இடையே அதிகாரப் போட்டி கடுமையான மோதலாக வெடித்தது. இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 68 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈக்வடாரில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த சிறைக் கலவரத்தில் 119 பேர் கொல்லப்பட நிலையில், மீண்டும் கலவரம் அரங்கேறியுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அதிகார மோதலின் விளைவாக இந்த மோதல்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்புக் குழுவைக் கூட்டியுள்ளதாக அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார்.