அமெரிக்கா செல்லும் கேரள முதல்வர்!

அமெரிக்கா செல்லும் கேரள முதல்வர்!

கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைக்க கேரள முதலமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின்  பிரபல தலைவருமான பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல உள்ளார். 

கேரள முதலமைச்சா் பினராயி விஜயன் அமொிக்காக செல்ல உள்ளார். இதற்காக நேற்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து அவர் விமானத்தில் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை   நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளாா்.

 அதனை தொடா்ந்து ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்திற்குச் செல்லும் பினராயி விஜயன், அங்குள்ள தொழில் அதிபர்கள், தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளாா். 15 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் அங்கிருந்து அவர் கியூபா நாட்டிற்கு செல்லவுள்ளாா். பின்னர் கியூபாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி தமிழ்நாடு வரவுள்ளார்.

இப்பயணத்தில் அவருடன் அவரது மனைவியும் கேரள நிதியமைச்சரும் உடன் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:நினைவுப்பாதையில் ஒரு பயணம்!