இனி டிக் டாக், வி சாட் செயலிகளை மக்கள் பயன்படுத்தலாம்!

டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டதற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

இனி டிக் டாக், வி சாட் செயலிகளை மக்கள் பயன்படுத்தலாம்!

டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டதற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த செயலிகளுக்கு அன்றைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைவிதித்தார்.

இந்நிலையில் இரு செயலிகளையும் ஆராய்ந்த அந்நாட்டின் வணிக அமைச்சகம், இரு செயலிகளின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இருப்பதாகக் கூறி தடையை விலக்கிக் கொண்டது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.மேலும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமெனவும் அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது

((https://twitter.com/i/status/1407518771686744064))