பாகிஸ்தானின் கழுதைகள், நாய்களை வாங்க விரும்பும் சீனா.. ஆப்கானிஸ்தானின் உதவியை நாடும் பாகிஸ்தான்.. என்ன தான் நடக்கிறது?

பாகிஸ்தானின் கழுதைகள், நாய்களை வாங்க விரும்பும் சீனா.. ஆப்கானிஸ்தானின் உதவியை நாடும் பாகிஸ்தான்.. என்ன தான் நடக்கிறது?

பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், வெள்ளம் காரணமாக பாகிஸ்தானில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானின் கழுதைகள் மற்றும் நாய்களை சீனா வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோரிக்கை:

இது தொடர்பாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கம் அளித்துள்ளனர். நாடு பண நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் குழுவிடம் கூறியுள்ளனர். 

வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி ,பாகிஸ்தானில் இருந்து கழுதைகள் மற்றும் நாய்களை இறக்குமதி செய்வதில் சீனா ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது குறித்து சீன தூதர் பலமுறை பேசியதாக பாகிஸ்தானின் செனட்டர் அப்துல் காதர் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானிலிருந்து...:

இது குறித்து மேலும் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள விலங்குகள் பாகிஸ்தானை விட விலை மலிவானவை என்பதால், முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு கழுதைகளை இறக்குமதி செய்து, பின்னர் சீனாவுக்கு இறைச்சியை ஏற்றுமதி செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மூடிய கதவு:

அவரது ஆலோசனையின் பேரில், ஆப்கானிஸ்தானில் இருந்து விலங்குகளை இறக்குமதி செய்வதற்கு முடிவு செய்த நிலையில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் விலங்குகளுக்கு தோல் கட்டி நோய் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கழுதை ஏன் தேவை:

சீனாவிற்கு எதற்காக இவ்வளவு பெரிய அளவிலான கழுதைகள் தேவைப்படுகின்றன என பார்க்கும்போது, விலையுயர்ந்த மருந்துகளை தயாரிக்க அதன் தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜெலட்டின் பயன்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்டது. மேலும் இது பாரம்பரியமாக இரத்தத்தை ஊற செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

நட்புறவு:

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்புறவு அனைவரும் அறிந்ததே. இந்தப் ஏற்றுமதியின் மூலம் சீனாவுடனான அரசியல் உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதே சமயம், எந்த சூழ்நிலையிலும் சீனாவுக்காக எதையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. இத்துடன் இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தானின் வருமானமும் அதிகரிக்கும். சீனா முன்பு நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் இருந்து கழுதைகளை இறக்குமதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு இந்த இரு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும் அவற்றின் ஏற்றுமதியைத் தடை செய்தன. 

முதன்முறையல்ல...:

பாகிஸ்தானிடம் இருந்து விலங்குகளை வாங்குவதில் சீனா ஆர்வம் காட்டுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும், பாகிஸ்தான், சீனாவுக்கு விலங்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. உலகில் கழுதைகள் அதிகம் உள்ள நாடுகளில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் தற்போது 5.7 மில்லியன் விலங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு, பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா மாவட்டத்தில் 3,000 ஏக்கர் பரப்பளவில் கழுதைப் பண்ணையை பஞ்சாப் அரசு அமைத்தது.

இதையும் படிக்க:   ஜப்பானை அலற விட்ட வட கொரியா!!! எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!!!