மீண்டும் போர் பயிற்சியில் இறங்கிய சீனா : ஏன் இந்த ஆத்திரம்?

தைவானை சுற்றி மீண்டும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. 

மீண்டும் போர் பயிற்சியில் இறங்கிய சீனா  : ஏன் இந்த ஆத்திரம்?

சீனாவிடம் இருந்து தைவான் பிரிந்து தனிநாடாக உருவெடுத்தாலும், அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில், கடந்த 2ம் தேதி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்க நாடாளுமன்ற குழுத்தலைவர் நான்சி பெலோசி, தைவான் சென்றார்.

இதனால் கோபமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் போர் பதற்றம் உருவான நிலையில், கடந்த 11ம் தேதி தனது பயிற்சியை சீனா முடித்துக்கொண்டது. 

இந்த சூழலில், தற்போது அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், தைவான் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்தனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா, மீண்டும் தைவானை சுற்றி போர் பயிற்சியில் இறங்கியது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சீன ராணுவம், தாங்கள் போர் தயார் நிலை ரோந்து மற்றும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் அமெரிக்கா மற்றும் தைவானுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.