ரஷ்யா வழியில் சீனா...தைவானில் போர் ஒத்திகை நடத்திய சீனா??!!

ரஷ்யா வழியில் சீனா...தைவானில் போர் ஒத்திகை நடத்திய சீனா??!!

இந்த சூழ்ச்சியின் மூலம் தைவான் பிரச்சினையில் தலையிட வேண்டாம் என அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கு சீனாவின் கிழக்கு தியேட்டர் கமாண்ட் செய்தி கொடுத்துள்ளதாக தனியார் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

திறனைக் காட்டிய சீனா:

தைவானின் வான்வெளி முழுவதையும் சுற்றி வளைத்து சீனா ராணுவ சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.  தகவல்களின் படி, சீனா இந்த பவர் ஷோவை 'ஸ்டிரைக் டிரில்ஸ்' வடிவில் செய்ததாகவும் அதன் கீழ் அதன் விமானப்படை மற்றும் இராணுவம் எந்த இலக்கையும் தாக்கும் அதனது திறனைக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

47 போர் விமானங்கள்:

தனியார் செய்தி நிறுவனத்தின் தகவலின் படி, தைவானை எச்சரிக்க சீனா 47 விமானங்களை சீனா அனுப்பியதாகவும் , தைவானின் வான் பாதுகாப்பு வலயத்தை சீனா மீறிய மிகப்பெரிய அத்துமீறல் இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளது.  இந்த காலகட்டத்தில், சீனா தனது ஜே-10, ஜே-11, ஜே-16 மற்றும் சுகோய்-30 போர் விமானங்கள் உட்பட 42 போர் விமானங்களையும், இரண்டு Y-8 கடல்சார் ரோந்து விமானம் மற்றும் ஒரு KJ-500 முன் எச்சரிக்கை விமானத்தையும் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.  இது தவிர, சீனாவில் இருந்து CH-4 மற்றும் WZ-7 ராணுவ ஆளில்லா விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.  மொத்தத்தில், 71 சீன விமானங்கள் தைவான் சீனாவிற்கு இடைப்பட்ட கடல் பகுதியில் காணப்பட்டுள்ளது.

போர் ஒத்திகை:

இந்த சூழ்ச்சியின் மூலம் தைவான் பிரச்சினையில் தலையிட வேண்டாம் என அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கு சீனாவின் கிழக்கு தியேட்டர் கமாண்ட் செய்தி கொடுத்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  இது தொடர்பான அறிக்கையும் சீனாவில் இருந்து வெளியாகியுள்ளது.  தைவானைச் சுற்றி இராணுவம் அதன் போர் தயார்நிலையை சோதித்ததாகவும், இராணுவப் பிரிவுகளுடன் கூட்டுப் படையை நடத்தியதாகவும் அது கூறியுள்ளது.  இருப்பினும், இந்த முன்னேற்பாடுகள் எங்கு செய்யப்பட்டது என்பதை சீனா நிலைமையை தெளிவுபடுத்தவில்லை. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சொல்லி அடிப்பேனடி...வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி அளித்த தென்கொரியா!!