எல்லைக்குள் சட்ட விரோதமான கிராமங்களை உருவாக்கி வரும் சீனா!

பள்ளத்தாக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவது செயற்க்கைக்கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது.

எல்லைக்குள் சட்ட விரோதமான கிராமங்களை உருவாக்கி வரும் சீனா!

இந்தியாவில் உள்ள கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஊடுருவ முயன்று வரும் சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தியது.இதனை தொடர்ந்து இந்தியாவும் சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து வருவதாகவும் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து நிலைத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதை தணிக்கும் நடவடிக்கையாக சீனப்பகுதியில் உள்ள  சுசுல்-மோல்டோ எல்லையில் இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் தரப்பில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்து செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.  இதன் மூலம் ஒரு முழு அளவிலான கிராமத்தை அது உருவாக்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை கண்டறிந்ததாக இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர்  டேமியன் சைமன் தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையே உள்ள  சர்ச்சைக்குரிய பகுதியில் நடந்து வரும் இந்த கட்டுமானப்பணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகள் மறுக்க முடியாத சான்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.