ஜப்பானில் அதிரிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம்!!

ஜப்பானில் இதுவரை துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக 1.08 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் அதிரிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம்!!

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமானது 2021 ல் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசும் இதற்கான காரணத்தில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. கட்டுபாடுகள் அதிகரித்த நிலையில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாததால் இதுவும் ஒரு காரணமாக குறிப்பிட்டு வருகின்றனர்.

2021 ல் குழந்தைகளுக்கு எதிராக துன்புறுத்தல் வழக்குகள் 1.7 சதவீதமாக அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் உணர்வுப்பூர்வமான தாக்குதல் தொடர்பாக 80,299 வழக்குகள் பதிவாகியுள்ளன. 19,185 வழக்குகள் உடல் தொடர்பான தாக்குதல் காரணமாக பதியப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து குறைபாடு என 8270 வழக்குகளும் பாலியல் ரீதியாக 296 வழக்குகளும் பதிவாகி இருக்கிறது.