சிங்கப்பூர்ல இனி தங்க முடியாது..அப்போ எங்க போகும் ராஜபக்ச குடும்பம்? இந்த நாடு எதுக்கு ஆதரவு கொடுக்கனும்?

தற்காலிகமாக தங்கிக் கொள்ள கோத்தபய ராஜபக்சவுக்கு தாய்லாந்து அனுமதி..!

சிங்கப்பூர்ல இனி தங்க முடியாது..அப்போ எங்க போகும் ராஜபக்ச குடும்பம்? இந்த நாடு எதுக்கு ஆதரவு கொடுக்கனும்?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கிக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜப்சே, தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அங்கு அவரது விசாக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, கோத்தபய ராஜபக்சவுக்கு மேலும் 2 வாரம் விசா நீட்டிப்பு வழங்கும்படி சிங்கப்பூரிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது. எனினும் இந்த கோரிக்கை மீது சிங்கப்பூர் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாக தங்கிக் கொள்ள மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.