இலங்கையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டால் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டால் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை கடும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. இதனிடையே, தனியார் பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் தரப்பு அரசுக்கு பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது.

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் பயணக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அஞ்சன பிரியன்ஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.