என்னைய காப்பாத்துங்க ஆப்கானிதானில் சிக்கியுள்ள லண்டன் இளைஞர் கதறல்!

ஆப்கானிஸ்தானில் மாட்டிக் கொண்டுள்ள லண்டன் இளைஞர் தன்னை மீட்க கோரி பேஸ்புகில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னைய காப்பாத்துங்க ஆப்கானிதானில் சிக்கியுள்ள லண்டன் இளைஞர் கதறல்!

ஆப்கானிஸ்தானில் மாட்டிக் கொண்டுள்ள லண்டன் இளைஞர் தன்னை மீட்க கோரி பேஸ்புகில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லண்டனில் உள்ள பிர்மின்ஹம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மைல்ஸ் ரவுட்லெட்ஜ் என்பவர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் உலகில் பல பகுதிகளுக்கு பயணிப்பாராம். பெரும்பாலும் தெற்காசிய நாடுகளுக்கு அதிகம் பயணம் செய்வது வழக்கமாம். இந்நிலையில் இவர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பறியுள்ளதால் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்த அவர், அங்கிருந்து பிரிட்டிஷ் தூதரகத்தை தொடர்பு கொண்டு தனது நிலை குறித்து கூற முயன்றுள்ளார் . ஆனால் தூதரகத்தில் இவரது அழைப்புக்கு யாரும் பதிலளிக்க வில்லையாம். இந்நிலையில் தன்னை மீட்க கோரி தனது பேஸ்புக்கில் மைல்ஸ் ரவுட்லெட்ஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது .