10,300 விமான சேவைகளை ரத்து செய்தது - பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம்!

10,300 விமான சேவைகளை ரத்து செய்தது - பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம்!

ஊழியர் பற்றாக்குறையின் காரணமாக பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 10,300 விமான சேவைகளை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கொரோனாவின் பிடியில் நாடு சிக்கி தவித்து வரும் நிலையில் விமான போக்குவரத்தினுடைய சேவைகள் தான் அதிகம் தேவைப்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. 

விமானத்தின் தேவைகள் அதிகரித்து வந்த நிலையில் பணியாளர்கள் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதற்கு எதேனும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற சூழலில் பணியாளர் குறைவு மற்றும் கொரோனாவை காரணங்களாக வைத்து இவ்வருடத்தின் அக்டோபர் மாதம் இறுதி வரை பல்வேறு நாட்டுக்கு செல்லும் விமான சேவைகளை மட்டும் சுமார் பத்தாயிரத்து 300-ஐ தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.