பாதுகாப்பு குறைபாடு - அபராதத்தை ஏற்றது போயிங் நிறுவனம்

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் வடிவமைப்பு தொடர்பான தகவல்களை, பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அபராத தொகையை செலுத்த போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையாக கொண்ட இயங்கி வரும் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் விமானம், இரு வேறு விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்தது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்துக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுபடி அமெரிக்க அரசுக்கு 250 கோடி டாலர்களை அபராதமாக செலுத்த போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.