அமெரிக்கா - தென்கிழக்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை! 

பனிப்புயல் நெருங்கி வரும் நிலையில் அதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாற்ய் அமெரிக்க மக்களை வர்ஜீனியா மாகாண ஆளுநர் வலியுறுத்தி வருகிறார்.

அமெரிக்கா - தென்கிழக்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் எச்சரிக்கை! 

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணங்களான ஓஹியோ,மேற்கு வர்ஜீனியா அட்லாண்டா உள்ளிட்ட பகுதிகளை பனிப்புயல் தாக்கக் கூடும் என குளிர்கால புயல் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த வெள்ளியன்று வேகமாக நகர்ந்து வரும் பனிப்புயலால் மத்திய மேற்குப் பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.இந்த பனிப்புயல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.பல பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டன.

டெஸ் மொயின்ஸில் உள்ள விமான நிலையத்தில் 14 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டதாக தேசிய வானிலை சேவை ஆய்வாளர் பிராட் ஸ்மால் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் தெற்கு அயோவாவில் ஒரு அடி உயரத்திற்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  டென்னசியின் சில பகுதிகள் 14 சென்டிமீட்டர் அளவிற்கு பனி பொழிவை பெறக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். வர்ஜீனியா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நெருங்கி வரும் புயலை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு மக்களை ஆளுநர் ரால்ப் நார்தம் வலியுறுத்தி உள்ளார். வடக்கு கரோலினாவில் உள்ள கடைகளில் பால், ரொட்டி உள்ளிட்ட அனைத்து அத்திவாசிய பொருட்களும் விற்று தீர்த்தன. 

பனிப்யுல் எச்சரிக்கையால்  அமெரிக்காவிற்குள் ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  விமான கண்காணிப்பு தளம் தெரிவித்துள்ளது. வட கரோலினாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் உள்பட அமெரிக்க விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.