கொரோனாவை தொடர்ந்து பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல்.. ஐரோப்பாவில் மீண்டும் கோரத் தாண்டவம்..!

கடந்தாண்டு இதேபோன்று தொற்று பரவலால் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அழிக்கப்பட்டது..!

கொரோனாவை தொடர்ந்து பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல்.. ஐரோப்பாவில் மீண்டும் கோரத் தாண்டவம்..!

கொரோனவில் இருந்து மீண்ட உலகம்:

உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பல லட்சம் உயிர்களை இழந்து தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி, பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றது. இருப்பினும் கூட அடுத்தடுத்து கொரோனா உருமாறி பல பெயர்களில் தொற்றாக பரவி வந்தாலு, பெரிதளவில் உயிரிழப்புகள் இல்லாததால், மக்கள் தங்களது வழக்கமான வேலைகளை செய்து வருகின்றனர். 

பறவைக் காய்ச்சல்:

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் பறவை காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சலால் பென்குயின், வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. 

கடந்தாண்டும் பரவிய தொற்று:

இதன் காரணமாக கட்டுப்பாடுகளும், மருந்து வழங்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலால் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.