கொரோனா பாதித்த நோயாளிகளின் வளர்ப்பு பிராணிகள் கொடூர கொலை - சீனாவில் பயங்கரம்

சீனாவில் கொரோனா பாதித்த நோயாளிகளின் வளர்ப்பு பிராணிகளை கொல்ல சாக்குமூட்டையில் கட்டி வைத்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதித்த நோயாளிகளின் வளர்ப்பு பிராணிகள் கொடூர கொலை - சீனாவில் பயங்கரம்

சீனாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குறிப்பாக ஷாங்காய் நகரில் மட்டும் கிட்டதட்ட 2 கோடியே 60 லட்சம் பேர் கடும் கட்டுப்பாடுகளால் தவிக்கின்றனர். இதில் அரசின் சித்ரவதையை தாங்க முடியாத பலர் வீட்டு பால்கனிகளிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தொற்று பாதித்தவர்களின் வளர்ப்பு பிராணிகளையும் கைப்பற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், அவற்றை சாக்குமூட்டையில் கட்டி கொடூரமாக அடித்து கொல்கின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில்,  விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.