உக்ரைன் - ரஷ்யா போருக்கு இடையில் 1000 கி.மீ தூரத்தை தனியாக கடந்த அபூர்வ சிறுவன்!

உக்ரைனிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்லோவேக்கியாவிற்கு தன்னந்தனியாக வந்த சிறுவனை, அதிகாரிகள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

உக்ரைன் - ரஷ்யா போருக்கு இடையில் 1000 கி.மீ தூரத்தை தனியாக கடந்த அபூர்வ சிறுவன்!

உக்ரைன் -ரஷ்யா போர் பதற்றத்தால், சபோரிஸியாவில் வசித்து வரும் தம்பதி, தங்களது 11 வயது மகனை ரயில் மூலம் தன்னந்தனியாக ஸ்லோவேக்கியா அனுப்பி வைத்தனர்.

பெற்றோர்களின் அறிவுறுத்தலின் பேரில் பாஸ்போர்ட்,  உறவினரின் முகவரி, கையில் எழுதப்பட்ட செல்போன் எண்களுடன் புறப்பட்ட சிறுவன், ஸ்லோவேக்கியா எல்லையை அடைந்துள்ளான்.

அங்கு அவனை கவனித்த அதிகாரிகள், முறையான விசாரணைக்கு பின்  பத்திரமாக அவரது உறவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.