ஆஸி. பொதுத் தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி - புதிய பிரதமராக பதவியேற்கிறார் அன்தோனி அல்பனீஸ்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வியை தழுவியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.

ஆஸி. பொதுத் தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி - புதிய பிரதமராக பதவியேற்கிறார் அன்தோனி அல்பனீஸ்!

தொடர்ந்து, நேற்று நேரடி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் பிரதமர் மோரிசனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கூட்டணியை வீழ்த்தி மத்திய இடது தொழிலாளர் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் 9 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, 31வது புதிய பிரதமராக அன்தோனி அல்பனீஸ் பொறுப்பேற்கவுள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன், புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள அந்தோனி அல்பனீசுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.