பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆர்ட்டெமிஸ்!!!

பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆர்ட்டெமிஸ்!!!

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் ஆர்டெமிஸ் பல்வேறு தடைகளை கடந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியாக, ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்த விண்கலத்தை ஏவும் பணி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் ஆர்டெமிஸை ஏவுவதற்கான 69 நிமிட கவுண்டவுன் கடந்த நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஆர்டெமிஸை 11 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது.  

ஆனால் ஆர்டெமிஸில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், அதனை ஏவுவதில் சிக்கல் ஏற்பட்டது. 
கவுன்ட்-டவுன் நடந்த போதிலும், எரிபொருள் கசிவை சரி செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டிருந்த நிலையில், இறுதியாக திட்டம் மூன்றாவது முறையாக மீண்டும் தடைப்பட்டது. 

இருப்பினும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு எரிபொருள் கசிவை குழுவினர் சரி செய்ததை அடுத்து, 45 நிமிடங்கள் தாமதமாக ஆர்டெமிஸ் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 

இதையும் படிக்க:   ஜி-20 பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபரின் ‘சல்யூட்’..!!!