சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் பரவல்.....!!!

சீனாவின் புதிய லாங்யா வைரஸ்.  சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் குறைந்தபட்சம் 35 பேர் லாங்யா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் பரவல்.....!!!

சீனாவில் கொரோனா வைரஸ் தொன்றி மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு விலங்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுவரை 35 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரியப்படுகிறது. இவர்கள் அனைவரும் விவசாயிகள் என தெரிய வருகிறது. இந்த புது வகை வைரஸ்க்கு லாங்யா வைரஸ் அல்லது லேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

லாங்யா வைரஸ்:

இந்த வைரஸ்கள் உயிர் பாதுகாப்பு நிலை நோய்க்கிருமிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  இவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.  தற்போது வரை இதற்கான எந்த தடுப்பு மருந்துகளும் இல்லை என அறியப்படுகிறது.

எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது:

கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சோதித்தப் போது அவர்களிடம் புதிய வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டையில் சவ்வு மாதிரியான பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், சோர்வு, இருமல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   சில பேருக்கு கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வைரஸ் எங்கிருந்து வந்தது:

இந்த புதிய வைரஸ் எலி போன்ற தோற்றமுடைய சிறிய மோல் என்ற விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இதுவரை உறுதியான எட்டப்படவில்லை என தெரிகிறது.