"இந்திய மக்கள் 140 கோடி பேருக்குக் கிடைத்த கெளரவம்" மோடி பெருமிதம்!

"இந்திய மக்கள் 140 கோடி பேருக்குக் கிடைத்த கெளரவம்" மோடி பெருமிதம்!

இது தனக்குக் கிடைத்த கெளரவம் அல்ல, இந்திய மக்கள் 140 கோடி பேருக்குக் கிடைத்த கவெளரவம் என பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவில் நடந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அரசுமுறை பயணமாக பப்புவா நியூ கினியா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற மாநாட்டில் உரை நிகழ்த்தினார். பசிபிக் தீவு நாடுகளுடன் இந்தியாவின் கூட்டாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 12 அம்சத் திட்டங்களை வெளியிட்டார். Who is James Marape? Papua New Guinea leader who touched PM Modi's feet |  World News - Hindustan Times

அதன்படி, பிஜியில் 100 படுக்கைகள் கொண்ட பிராந்திய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பது,  பப்புவா நியூ கினியாவில் பிராந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையத்தை அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுக் கட்டிடங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம், 24 நேர அரசு சேவை மையம், தூய்மையான குடிநீர் வழங்கும் மையங்கள், யோகா மையங்கள் அமைத்தல் உள்ளிட்டவையும் அதில் தெரிவிக்கப்பட்டன.

Har Har Modi,' 'Bharat Mata Ki Jai' echo in Papua New Guinea streets as  Indian diaspora welcomes PM Modi | India News - Times of India

முன்னதாக பிரதமர் மோடிக்கு பலாவ் குடியரசின் குடியரசுத்தலைவர் எபாகல் விருது வழங்கி கவுரவித்தார். இதேபோல் உலகளாவிய தலைமையை அங்கீகரிப்பதற்கு துணை நிற்போம் என, ஃபிஜி தரப்பில் பிரதமர் மோடிக்கு உயரிய கவுரவம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, இது தனக்குக் கிடைத்த கவுரவம் அல்ல, இந்திய மக்கள் 140 கோடி பேருக்குக் கிடைத்த கவுரவம் எனக் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிக்க:அரசுக்கும், காவல்துறைக்கும் தெரிந்தே குற்றங்கள் நடைபெறுகிறதா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!