மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ள வேளாண்துறை... ஐ.நா. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை...

காலநிலை மாற்றத்தால், மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ள வேளாண்துறை... ஐ.நா. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை...

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் சி.ஓ.பி.26 என்று அழைக்கப்படும் சம்மந்தப்பட்ட தரப்புகளின் மாநாடு என்ற பெயரில் பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், உலகளாவிய கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டுள்ளனர்.

கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் பாரீஸ் உடன்பாட்டின் விதிகள் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டின்போது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பருவநிலை மாற்றம் குறித்து பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,  நமது வளர்ச்சி கொள்கைகள் மற்றும் திட்டங்களில் முக்கிய பங்காக  பருவ நிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,  காலநிலை மாற்றத்தால், இந்தியாவில்  மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.