உக்ரைன்- ரஷ்யா இடையே ஒப்பந்தம்...ஐநா முன்னிலையில் கையெழுத்து..!

உக்ரைன்- ரஷ்யா இடையே  ஒப்பந்தம்...ஐநா முன்னிலையில் கையெழுத்து..!

உக்ரைன்- ரஷ்யா இடையே தானியம் ஏற்றுமதி செய்வது தொடர்பான ஒப்பந்தம்  இன்று ஐநா முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்:

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைன் நகரங்கள் முழுவதும் உருக்குலைக்கப்பட்டுள்ள நிலையில், அணு ஆயுத உலைகள், ஏற்றுமதி துறைமுகங்களை ரஷ்ய வீரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். 

ஏற்றுமதி பாதிப்பு:

இதனால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உலக நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைன் துறைமுகங்களில் ஏற்றுமதிக்கு தயாராக உள்ள சூரியகாந்தி எண்ணெய், கோதுமை ஆகியவற்றை தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிக்க ஐநா திட்டமிட்டது. 

தானியம் ஏற்றுமதி செய்வது தொடர்பான ஒப்பந்தம்:

இந்தநிலையில் தானிய ஏற்றுமதியை மீண்டும் புதுப்பித்திடும் வகையில் உக்ரைன், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று ஐநா பொதுச்செயலர் ஆன்டனியோ குட்ரெஸ் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த கூட்டமானது துருக்கி அதிபர் எர்டகன் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதில் உக்ரைன்- ரஷ்யா தரப்பில் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.