ட்விட்டர் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... செயல் அதிகாரி பராக் அகர்வால் நடவடிக்கை...

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பராக் அகர்வால் பொறுப்பேற்ற உடனே நிர்வாகத்தில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... செயல் அதிகாரி பராக் அகர்வால் நடவடிக்கை...

உலகின் சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, இந்தியாவை பூர்விகமாக கொண்ட 37 வயதான பராக் அகர்வால், கடந்த மாதம் 29-ம் தேதி நியமிக்கப்பட்டார்.  

அவர் பதவியேற்ற உடனே, டுவிட்டர் நிர்வாகத்தில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மூன்று துணைத் தலைவர்களுக்கு, பொது மேலாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொறுப்புணர்வு, வேகம் மற்றும் செயல் திறன்களை அதிகரிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், டுவிட்டரின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவரான டேன்டிலே டேவிஸ் மற்றும் பொறியியல் பிரிவு தலைவர் மைக்கேல் மோன்டனோ ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.  டுவிட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, டுவிட்டரின் சமூக ஊடக சேவைப் பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.