உயிருரை காப்பற்ற சிறுநீரகத்தை தானம் செய்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! என்னன்னு தெரியுமா?

தாராள மனதுடன் சிறுநீரகத்தை தானம் செய்வதற்கு சென்ற நபருக்கு மருத்துவ கட்டணமாக சுமார் 10 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டது பேரதிர்ச்சியாக அமைந்தது.

உயிருரை காப்பற்ற  சிறுநீரகத்தை தானம் செய்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! என்னன்னு தெரியுமா?

அமெரிக்காவில் வசித்து வரும் 28 வயதான ஸ்காட் கிலைன் என்ற நபருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் உயிருக்கு போராடி வந்தார். அதனால் கிலைனின் தாயார் சிறுநீரக தானம் செய்யுமாறு பலரிம் தொடர்புக்கொண்ட போதும், யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் தான் எலியட் மாலின்  என்பவர்  தாராள மனதுடன் தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார். இவர் தானம் செய்ய முன்வந்த நான்கு நாட்களிலேயே, கிலைனின் சிறுநீரகம் முழுவதும் பழுதடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், ஜூலை 2021 இல் டெக்சாஸின் போர்ட் வொர்த்தில் உள்ள மருத்துவமனையில் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை நடைபெற்றது. எலியட் மாலினும் தனது சிறுநீரகத்தை தானம் செய்தார்.

ஆனால், அதற்குபிறகு தான் மாலின் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சம்பவம் ஒன்று அரங்கேறியது. என்னவென்றால், மருத்துவச் செலவுகள் பொதுவாக உறுப்பை பெறுபவரின் காப்பீட்டால் ஈடுசெய்யப்படுவது தான் வழக்கம். இங்கோ துரதிர்ஷ்டவசமாக, மாலினின் விஷயத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. ஸ்காட் கிலைனுக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவிற்கான கட்டணமாக  சுமார் 10 லட்சம் ரூபாய்  எலியட் மாலினுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தாராள மனதுடன் சிறுநீரகம் தானம் செய்ய வந்தவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால்,  நார்த்ஸ்டார் என்ற மயக்க மருந்து வழங்கும் நிறுவனம், நீங்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் அபதாரம் வசூலிக்கப்படும் என்று மிரட்டியுள்ளது.

பின்னர் இது குறித்து மாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிய நார்த்ஸ்டாரின் தலைமை நிர்வாக அதிகாரி, பில்லிங் தவறு காரணமாக மருத்துவக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதாக எழுதியுள்ளார்.