சிலிண்டர் விலை ஏறினா என்ன..? இனி கவலையே இல்லை... வெயில் இருந்தாலே போதும்...

கத்தார் நாட்டில் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தில் பெண் ஒருவர் ஆம்லேட் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலிண்டர் விலை ஏறினா என்ன..? இனி கவலையே இல்லை... வெயில் இருந்தாலே போதும்...
தற்போது கோடை காலம் நிலவுவதால் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசுவதுடன் வெயில் தனலெனெ தகித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலை பலர் வார்த்தைகளால் வறுத்தெடுப்பர். ஆனால் இங்கோ பெண் ஒருவர் உண்மையிலேயே வெயிலில் வறுத்தெடுத்துள்ளார்.
அதாவது தகிக்கும் வெயிலில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, முட்டையை உடைத்து ஆம்லேட் போட்டுள்ளார் இவர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.