ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் :
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,...
ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் எனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் :
இதனைத்தொடர்ந்து, ஒடிசா ரயில் விபத்து குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இரங்கல் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகுந்த துயரமானது என்றும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் சிங்கப்பூர் அரசு சார்பாக இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துள்ளதாகவும் சைமன் வாங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மக்கள் இந்திய மக்களோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிக்க | " மத்திய அரசு ஊர் ஊராக சென்று 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் " - திருமாவளவன்.