ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்து...தொடரும் மீட்பு பணி....

ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்து...தொடரும் மீட்பு பணி....

சீனாவில் ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளா்கள் 5 பேர் உயிரிழந்தனர். 

சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் உள்ள ரசாயன உற்பத்தி ஆலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா்.  அப்போது எதிா்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினா் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.  இதில் 5 தொழிலாளா்கள் பிணமாகவும், 34 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டனா்.  மேலும் 8 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”அமைதியான வழியிலேயே தீர்வு காண முடியும்.....” பாகிஸ்தான் பிரதமர்!!!