பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ...மாணவர் ஒருவர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ...மாணவர் ஒருவர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பினும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்ட  நிலையில் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த காவல்துரையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் மற்றொரு சக மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக, மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்தும் மாணவர்களின் வயது உள்ளிட்ட விவரங்கள் குறித்தும்  காவல் துறையினர் தரப்பில் கூறப்படவில்லை. மேலும் இது குறித்து விசாரணை தொடர்ந்த நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.