ஆப்கானில் நிலவும் கடும் பஞ்சம் - சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் பொதுமக்கள் 

சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.70,000 வரை வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஆப்கானில் நிலவும் கடும் பஞ்சம் - சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் பொதுமக்கள் 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் 5 லட்சத்துக்கும் மேற்ப்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக சொல்கின்றனர்.

உலக நாடுகள் ஆப்கான் நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில் நிதிநெருக்கடி ஏற்ப்பட்டதாக சொல்லப்படுகிறது.உணவுப் பொருட்களுக்கு  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அநாட்டில் சுமார் 2.2 கோடி மக்கள் பசியில் வாடி வருவதாகப் பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா தெரிவித்துள்ளார்.

வேலையிழப்பு, பஞ்சம் ஆகியவற்றால் அந்நாட்டில் உள்ள மக்கள் சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக தகவல் வெளியாகியது. ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.  ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.70,000 வரை வழங்கப்படுவதாகவும், 5 வயது முதலான சிறுமிகளின் சிறுநீரகங்களும் விற்கப் பட்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.