ஆஸ்திரேலியாவில் தென்பட்ட சிவப்பு நிற அரியவகை ஆக்டோபஸ்!!

ஆஸ்திரேலியாவில் அரிதான ஆக்டொபஸ் ஒன்று தென்பட்டுள்ளதாக அதனை படம்பிடித்து வெளியிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தென்பட்ட சிவப்பு நிற அரியவகை ஆக்டோபஸ்!!

GREAT BARRIER REEFஎனப்படும் பவளத்திட்டுகளுக்கு அருகே அரிய வகை சிவப்பு நிற ஆக்டோபஸை ஆய்வாளர்கள் படம்பிடித்துள்ளனர்.

ஜெசிந்தா சாக்லெட்டான் என்பவர் அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அரிய வகை ஆக்டோபஸை படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.இது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு எனத் தெரிவித்துள்ளார். வழக்கமாக ஆழ்கடலில் மட்டும் இவ்வகை ஆக்டோபஸ்களை காண முடியும் ஆனால் சற்று மேற்பரப்பிற்கு வந்தது ஆச்சர்யமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.