விவாகரத்து கொடுத்த குற்றத்திற்காக 8000 ஆண்டுகளுக்கு தண்டனை பெற்ற நபர்!!

இஸ்ரேலில் வசித்து வரும் ஆஸ்திரேலியரான ஒருவரதின் விவாகரத்து வழக்கில் 8 ஆயிரம் ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது....

விவாகரத்து கொடுத்த குற்றத்திற்காக 8000 ஆண்டுகளுக்கு தண்டனை பெற்ற நபர்!!

ஆஸ்திரேலிய பகுதியை செர்ந்தவரான ஹப்ரீட் என்பவர் இஸ்ரேலைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பமாக இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இஸ்ரேலுக்கு சென்ற கணவன் மனைவி இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்ட போது அவரது மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை விசாரனைக்கு வந்ததையடுட்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 3.34 மில்லியன் அமெரிக்க டாலர்களை சன்மானமாக அளிக்க வேண்டும் என இருவருக்கும் உத்தரவிட்டுள்ளது.மேலும் அவர்களின் குழந்தைகள் 18 வயது நிரம்பும் வரை மாதம் 5 ஆயிரம் இஸ்ரேலிய ஷேக்கல்கள் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த தண்டனையில் கடைசியாக கொடுக்கப்பட்ட நிபந்தனை தான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது.ஹப்ரீட் சன்மானம் கொடுக்காமல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் ட்சம்பர் மாதம் 319999 ஆம் ஆண்டு தான் வெளியேற முடியும் என இஸ்ரேல் மத நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வேலை காரணமாக கூட ஹப்ரீட் இஸ்ரேலை விட்டு வெளியேற கூடாது எனவும் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஹப்ரீட் தான் வசித்து வரும் இஸ்ரேலில் மதச் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.அந்நாட்டின் சட்டங்கள் எதுவும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தன்னைப்போல் ஏரளாமானோர் அங்கு மாட்டிக் கொண்டிருப்பதாகவும், இந்த விஷயம் குறித்து வெளிநாட்டினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஹப்ரீட் கூறியுள்ளார்