குரங்கு அம்மைக்கு புதிய பெயர்..! காரணம் இது தான்..!

குரங்கு அம்மைக்கு புதிய பெயர்..! காரணம் இது தான்..!

குரங்கு அம்மைக்கு புதிய பெயரை வெளியிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு.

குரங்கு அம்மை:

குரங்கு அம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிக அரிதான ஒன்று. 

குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள்! அவதானமாக இருக்க எச்சரிக்கை - ஐபிசி தமிழ்

ஆப்பரிக்கா:

தொடக்கத்தில் குரங்குகளிடையே பரவி வந்த இந்த நோய் தற்போது மனிதர்களிடையே அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆப்பரிக்க நாடுகளில் அதிகமாக பரவும் நிலையில், குரங்கு அம்மை என்ற பெயர் கருப்பினத்தவர்களை இழிவுபடுத்தக் கூடும் என்பதால் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒரே வாரத்தில் வீடு..! வீட்டிற்கே சென்று ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

புதிய பெயர்:

அந்த வகையில், குரங்கு அம்மைக்கு ‘எம்-அம்மை’ (M-POX) என்ற புதிய பெயரை வெளியிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலும், குரங்கு அம்மை என்ற பெயரின் பயன்பாடும் படிப்படியாக பழக்கத்தில் இருந்து குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.