தடுப்பூசியில் இருந்து தப்பிப்பதற்காக சொந்த மகன்களையே கடத்திய தாய்!!

தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமா இல்லை என்பதை பெற்றோர்கள் ஆகிய நாங்கள் தான் தீர்வு செய்ய வேண்டும் என பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பூசியில் இருந்து தப்பிப்பதற்காக சொந்த மகன்களையே கடத்திய தாய்!!

ஸ்பெயின் நாட்டில் 5 முதல் 11 வயது குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அந்நாட்டை சேர்ந்த 45 வயதான பெண்மணி ஒருவர் தனது 12 மற்றும் 14 வயதுடைய மகன்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தடுக்கும் பொருட்டு அவரே இரு மகன்களையும் கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது.

அந்த பெண்மணியானவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவரது இரு மகன்களும் தந்தையிடம் வளர்ந்து  வருவதாக சொல்லப்பட்டது.இந்த நிலையில் பள்ளி முடிந்து தனது மகன்கலை அழைத்து வந்த பெண்மணி தனது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது வேண்டுமா இல்லை என்பதௌ நான் தான் முடிவு செய்ய வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தது தொடர்ந்து அந்த பெண் காவல் நிலையத்தில் இரு மகன்களோடு சரண் அடைந்ததாக சொல்லப்படுகிறது.மேலும் இந்த  வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம அந்த பெண்மணியை காவலின் பிடியில் வைக்க உத்தரவிட்டுள்ளது.